தோழர்களே
வணக்கம் வருகிற செப்டம்பர் 2 தேதி அன்று நடைபெறவிருக்கிற தேசம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்தில் நமது FNPO சங்கமும் கலந்து கொள்கிறது என்பதை நாம் அறிந்ததே.
ஏன் இந்த போராட்டம்
?
இப்போது தேவையா ?
இதன் நோக்கம் என்ன? என்பதை நாமும் முணுமுணுக்காமல் இல்லை.
ஆம். தோழர்களே
இத்தனை கேள்விகளையும் சில பல நாட்களாக நமது தொழிற்சங்க தலைவர்களும் விவாதித்து கடைசியாக ஒருமித்த நிலைப்பாட்டில் வந்துள்ளனர் அதன் பயனாக நாமும் இந்த போராட்டத்த்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து வேலைநிறுத்த அறிவிப்பு முறையாக அரசிடம் (இலாகா) விடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில அரசியல் சார்பு இயக்கங்கள் மா.சிந்தனைவாதிகள் (?) பொதுவாக வருடத்தில் ஒருநாள் போராட்டங்களை நடத்துவது தெரிந்ததே !
நாம் INTUC சார்பு நிலையிலும், என்றும் அரசியல் சார்பு நிலை எடுத்தது இல்லை.
ஆனால் இன்று................
தொடர்ந்து அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை
7வது ஊதிய குழுவில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
இரு வேறுபட்ட கமிட்டிகள் minimum wages, allowances and new Pension Scheme போன்றவற்றை பரிசீலிக்க அறிவித்தும் அவை முழுமையான பலனை தரும் என அறுதியிட்டு கூற முடியாத நிலை.
தொழிலாளர் இயக்கங்களை பாதிக்கும் வகையில் தொழிலாளர் நல சட்டத்தை தன்னிச்சையாக மாற்றியமைக்க முயற்சி
இன்றைய நிலையில் நமது துறையில் கடுமையான ஆள் பற்றாக்குறை Outsourcing முறையில் ஆள் எடுப்பு, இவை வருங்கால சந்ததியினரின் வேலைவாய்ப்பை பறிக்கும் நிலை.
இந்த சூழலில் இந்த போராட்டம் அவசியமாகிறது.
நாமும் இந்த போராட்டத்த்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது
தோழர்களே வேலை நிறுத்தத்தில் பங்குபெறுவீர். வெற்றிபெறசெய்வீர்.
தோழர்களே வேலை நிறுத்தத்தில் பங்குபெறுவீர். வெற்றிபெறசெய்வீர்.
0 comments:
Post a Comment