அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
இன்று
(18.11.2016) தமிழக அஞ்சல் ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு சார்பாக
சென்னை CPMG அலுவலகத்தின் ஒரு பகுதியான அண்ணா சாலை தலைமை அஞ்சலக
வளாகத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
DEMONITIZATION
மற்றும் ETAIL டெலிவரி தொடர்பாக , ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்
பணி, இரவு 08.00 மணி வரை COUNTER பணி , இரவு 12.00 மணிவரை இதர பணி ,
அதற்கான உரிய ஊதியம் வழங்காமை , அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து
கொடுக்காத நிலை , கள்ளநோட்டு கண்டறியும் கருவி வழங்காதது , அப்படி வசதி
இல்லாத அலுவலகங்களில் தவறி பெறப்படும் நோட்டுக்கள் வங்கிகளால்
கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டால் அதன் இழப்பை ஊழியர்கள் தலையில்
கட்டுவது என்பது போன்ற பிரச்சினைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம்
சிறப்பாக நடைபெற்றது .
NFPE சார்பாக
திரு G. கண்ணன் அவர்களும் (CONVENER )
FNPO சார்பில் திரு சுகுமார் ,
மாநிலச் செயலர் P4 அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்று நடத்த,
NFPE P3 மாநிலச் செயலர் திரு J. R ., NFPE R4 திரு பரந்தாமன்,
FNPO P3 சார்பில்
திரு திருஞானசம்பந்தம்,
FNPO R 3 மாநில பொ செயலர் திரு சங்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். கோரிக்கை
முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது .
ஆர்ப்பாட்ட
முடிவில் CPMG அவர்களை சந்தித்து TN PJCA சார்பில் கோரிக்கை மனு
அளித்து பிரச்சினைகளை விவாதிக்கப்பட்டன. பிரச்சினைகள் விரைவில்
தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும்
27.11.2016 ஞாயிறு பணி புறக்கணிப்பு தமிழகம் முழுவதும் நடைபெறும்
என்றும் , அதன் பின்னரும் பிரச்சினைகள் தொடரும் எனில் JCA சார்பில் வேலை
நிறுத்த நோட்டீஸ் அளித்து அதன் மீது வேலை நிறுத்தம் நடத்தப்படும்
என்றும் ஊழியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
CPMG அவர்கள்
ஊழியர் தரப்பின் பிரச்சினைகள் மீது உரிய கவனம் செலுத்துவதாகவும் ,
இலாக்கா முதல்வரிடம் இந்த கோரிக்கை மனு மற்றும் பணிப் புறக்கணிப்பு
குறித்த செய்தி உடன் எடுத்துச் செல்வதாகவும் உடன் பிரச்சினை தீர்த்திட ஆவன
செய்வதாகவும் உறுதி அளித்தார்.
மேலும் இலாக்கா முதல்வரிடம் ஏற்கனவே கள்ள நோட்டு கண்டறியும் கருவிகள்
அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கிட உரிய நிதி கோரியிருப்பதாகவும் உடன்
இந்தப் பிரச்சினைக்கு தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஏற்கனவே ஒய்வு
பெற்ற ஊழியர்களை கோட்டங்களில் பணிக்கு அமர்த்திட உத்திரவு
அளித்துள்ளதாகவும் , அதனை அமல் படுத்திட உடன் நடவடிக்கை எடுப்பதாகவும்
தெரிவித்தார்.
ஞாயிறு பணி
ரத்து செய்தல் ,'C' மற்றும் 'B' கிளாஸ் அலுவலகங்களில் நோட்டு மாற்றும்
வேலை ரத்து , தினமும் 4.௦௦ மணியுடன் COUNTER பணி முடித்தல் , பணி பார்த்த
ஊழியர்களுக்கு பணப்பயன் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து
உடனடியாக இலாக்கா முதல்வருடன் தொடர்பு கொண்டு முடிவெடுப்பதாக
தெரிவித்தார். இதர பிரச்சினைகள் குறித்து எதிர் வரும் 23.11.16 அன்று
அன்று நடைபெற உள்ள FOUR MONTHLY MEETINGன் போது முடிவுகள் தெரிவிப்பதாக
கூறினார். சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது . உடன் பலன்களை எதிர் நோக்குவோம். இல்லையேல் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம்,.
கோரிக்கை மனுவின் நகல் கீழே பார்க்கவும் :-
0 comments:
Post a Comment