அகில இந்திய PJCA போராட்ட முடிவுக்கு முன்பு
களம் இறங்கியது தமிழ் மாநில PJCA.
ரூ.
500/- மற்றும் ரூ. 1000/- WOS ரூபாய் நோட்டுக்கள் மாற்றுதல் மற்றும்
கணக்குகளில் டெபாசிட் செய்தல் குறித்து மத்திய அரசின் முடிவினாலும் , இது
குறித்து துறை அமைச்சரின் உத்திரவினாலும் , தொடர்ந்த இலாக்கா
உத்திரவுகளாலும் தினசரி பல்வேறு பிரச்சினைகள் ஊழியர்களுக்கு எழுந்த
வண்ணம் உள்ளன .
மேலும்
ஞாயிறு , விடுமுறை தினங்களில் அனைத்து பகுதி ஊழியர்களும் பணிக்கு வர
உத்திரவிடப்படுகிறார்கள். அது போல இரவு 08.00 மணிவரை COUNTER பணியும்
அதன்பின்னர் இரவு 11.00 மணிவரை CASH CONVEYANCE , SUB A/C, TREASURY என
பல்வேறாக பணி செய்திட நிர்பந்திக்கப்படுகிறார்கள்
இதற்கு உரிய POLICE பாதுகாப்பு அளிப்பதில்லை. பல கோடிக்கணக்கான பண
வைப்புக்கு எந்தவித பாதுகாப்பும் செய்வதில்லை. எழுத்தர்கள், தபால்காரர்கள்,
MTS , GDS , RMS என்று எல்லா பகுதிகளிலும் பாதிப்பு !
1. எதிர்வரும்
18.11.2016 வெள்ளியன்று மாநிலம் தழுவிய அளவில் கருப்பு வண்ண கோரிக்கை
அட்டை அணிந்து அனைத்து கோட்ட நிர்வாக அலுவலகங்கள் முன்பாக கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்துவது.
2.அதே நாளில் மாநிலத் தலைமையகமான சென்னையில் CPMG அலுவலகம் முன்பாக சென்னை
பெருநகரத்தின் கோட்ட /கிளைகளை உள்ளடக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம்
நடத்துதல் . அன்றைய தினத்தில் CPMG அவர்களிடம் அனைத்து பகுதி
கோரிக்கைகளையும் உள்ளடக்கி கோரிக்கை மனு அளித்தல்.
3.இதன்
அடிப்படையில் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் எதிர்வரும் 27.11.2016
ஞாயிறு அன்று தமிழகம் முழுதும் பணி மறுப்புப் போராட்டம் நடத்துவது.
4. மேலும்
NFPE COC மற்றும் FNPO COC ஒன்று பட்ட போராட்ட முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக கோரிக்கைகளை ஒன்று படுத்தி சட்ட பூர்வமான நோட்டீஸ் அளித்து ஒரு வேலை
நிறுத்தத்தை அறிவிப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று பட்ட போராட்டத்திற்கு நாம்
வழி வகுப்போம்.
கோரிக்கைகள்
அஞ்சல் துறையே !
-ஞாயிறு & விடுமுறை தினங்களில் ஊழியர்களை பணிசெய்ய துன்புறுத்தாதே !
-காலை முதல் இரவு பணி என கொடுமைப்படுத்தாதே !
-விடுமுறை நாளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வங்கிகளைப்போல் ஒரு நாள் ஊதியம் வழங்கு !
-அனைத்து அலுவலகங்களிலும் கள்ள நோட்டு கண்டறியும் கருவி வழங்கு
-கருவி வழங்கப்படாத அலுவலகங்களில்
வங்கிகளால் நிராகரிக்கப்பட்ட நோட்டுகளுக்கு இழப்பீட்டை ஊழியர்கள் தலையில்
கட்டாதே !
நிர்வாகமே ஏற்று கொள் !
-Cash conveyance க்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாகன வசதி வழங்கு
0 comments:
Post a Comment