ஓய்வு பெற்ற Deputy Chief Postmaster திரு.M.பேச்சிமுத்து (84) அவர்கள் இன்று அதிகாலை 0300 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.அன்னாரின் இறுதி சடங்கு நாளை (06.12.2016) காலை 0900 மணிக்கு NGO Colony -மகிழ்ச்சிநகர் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
திரு.M.பேச்சிமுத்து அவர்கள் தபால்காரர் இலாகாவில் பணியில் சேர்ந்து Chennai GPO -Deputy Chief Postmaster (SSPOs) ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
NFPE P4 திருநெல்வேலி கோட்ட செயலாளராகவும், மாநில செயலாளராகவும், அகிலஇந்திய அளவில் NFPE P4 ல் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றாலும் தனது எழுத்தின் வலிமையால் அதிகார வர்க்கத்தை எதிர்த்தவர்.
தனது வாழ்க்கையை அஞ்சல் ஊழியர் நலனுக்காக செலவிட்டவர்.
"கலங்கரை விளக்கு" மாத இதழ் மூலம் பல்வேறு கட்டுரைகள் எழுதி பல்வேறு தரப்பினரை அறிவு தாகத்தை தீர்த்துவைத்தவர். அவரின் கருத்துக்கள் ஆழமானவை. பல்வேறு ஊதிய குழுவிலும் தனது கருத்துக்களை நேரடியாகவும் பல்வேறு இயக்கங்கள் மூலமும் விரிவாக எடுத்துரைத்தவர்.
வாழ்க்கையில் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் பலருக்கு உதவி செய்யவே என்ற எண்ணம் கொண்டவர்.தன்னை நாடி வந்தவர்களுக்கு Appeal Petition மூலம் பல்வேறு Disciplinary Case களில் வென்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர்.
தற்போது இரு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் ஓய்வு நேரத்தில் பல்வேறு பட்டவர்களின் ஊதிய நிர்ணய குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு உரிய கடிதங்களை எழுதி கொடுத்து உதவியவர்.
என்ணெற்றோரின் அன்பைத்தவிர வேறு தனக்கென்று எந்த சேமிப்பையும் வைத்து கொள்ளாதவர.
ஓய்வுக்கு பிறகும் ஓய்வூதியர் சங்கத்தில் ஓய்வூதியர் நலனுக்காக தனது வாழ்நாளை செலவிட்டவர். பல்வேறு விஷயங்களில் நமது நெல்லை தேசிய சங்கத்திற்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கியவர்.
அன்னாரின் மறைவு அஞ்சல் ஊழியர்களுக்கு பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறையருள் வேண்டுகிறோம்.

2 comments:
ஆழ்ந்த இரங்கல்கள்
Unblemished Service
Fully committed for the welfare of the postal family
A real Hero
Unbearable loss to Postal family especially for the Tirunelveli comrades
Post a Comment