Tuesday, 6 December 2016

இமயம் சரிந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, அங்கிருந்து ராஜாஜி ஹாலில் செவ்வாய்க்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


எழுதியது யார் என தெரியல ஆனா மனசை கனமாக்கிவிட்டது வார்த்தைகள்..
.
பூ போன்ற மகள்
அப்பல்லோவில் படுத்துக் கிடக்கிறாளே என
புலம்புவதற்கு தாய் இல்லை....
.
நோய் தீர்ந்து மகள் புன்னகை சிந்தி வருவாளென பார்த்திருக்கத் தந்தை இல்லை...
.
தெய்வங்களைக் கேட்டே என் சகோதரி நலம் மீட்பேன் என்று பூஜை செய்ய சகோதரன் இல்லை..
.
மாற்றுடை வேண்டுமோ என
உடுப்புகள் தேடி எடுத்துப் போக உடன் பிறந்த தங்கை இல்லை..
.
பெற்றவள் நலம் மீட்ட பின்பே மற்ற வேலை என்று மார் தட்டிச் சொல்வதற்கு மகன் இல்லை..
.
மருந்து மாத்திரை தேடி எடுத்து மணி தவறாமல் கொடுத்திட மகள் இல்லை..
.
ஆனாலும் ஈரெட்டு நாட்களாய் தாய் முகம் காணாமல் எத்தனை இதயங்கள் இங்கே
கண்ணீரில் குளிக்கிறதே..
.
கட்டுக்கடங்கா கூட்டம்...
வாழ வைத்த தாய் வாடிக் கிடக்கலாமோ என செந்தனலில் இட்ட புழுவாய் தவிக்கிறது...
.
உள்ளங்கைக்குள் மாணவர் உலகைக் காண மடிக்கணினி
தந்த மாதரசி நலம் பெறவே
வேண்டி நிற்கிறது மாணவச் சமூகம்..
.
காவேரியை மீட்டு வந்து
முல்லைப் பெரியாரை
காத்துத் தந்து
கழனி வாழ் உழவினத்தின் கண்ணீர் துடைத்த எங்கள் கனிவு மனத் தாயுன்நிலை பொறுக்காமல் உயிர் உருகும் வேதனையில் உழவர் கூட்டம்
இன அழிப்பு இலங்கைக்குக்
குலைநடுக்கம் கொடுத்த
உலகத் தமிழினத்தின் ஒப்பில்லாத் தலைவியை
ஒரு நோய் வந்து சாய்ப்பதுவா என ஊணுறக்கம் கொள்ளலையே..
.
கருணை தரித்த
எங்கள் அம்மா உமக்கோ பத்து கோடி பாசப் பிள்ளைகள்..
.
வாஞ்சை மிகு தாய் எழுந்து வரும் நாளை எதிர்பார்த்து வாடுதே எங்கள் மனசு..
.
அம்மாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருத்தனாய்..!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms