தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நமது FNPO - NFPE - Postal JCA சார்பாக வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு NFPE தலைவர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.போராட்டத்தில் NFPE செயலர் S.K.ஜேக்கப் ராஜ்,
FNPO தலைவர் S.A.இராமசுப்பிரமணியன்
FNPOசெயலர் தோழியர் S.சூரியகலா,
NFPE P4 முன்னாள் செயலர் திரு G.கிருஷ்ணன்
NFPE P4 செயலர் S.K. பாட்சா,
AIGDSU செயலர் காலப்பெருமாள்,
பாளை தலைமை அஞ்சல் அதிகாரி N.இராமச்சந்திரன்
மற்றும் தோழர்.C.வண்ணமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சி
0 comments:
Post a Comment