The Chief Minister received the first set of Commemorative Stamps
released by Director Shri.T.Murthy in a function at the MGR Medical
University. He and his cabinet colleagues paid floral tributes to the
late leader's statue at the varsity.
சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில், எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலையை இந்திய அஞ்சல் துறையின் இயக்குநர் டி.மூர்த்தி வெளியிட, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
(உள்படம்) எம்ஜிஆர் படம் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல்தலை

எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு
அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ் நாடு
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள அவரது முழு உருவச் சிலை வண்ண
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு எம்ஜிஆரின் சிலைக்கு கீழே வைக் கப்பட்டிருந்த அவரது
படத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பு அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,
இந்திய அஞ்சல் துறையின் இயக்குநர் டி.மூர்த்தி எம்ஜிஆரின் சிறப்பு
அஞ்சல்தலையை வெளியிட, அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலை யின் விலை ரூ.15.
0 comments:
Post a Comment