The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 12 July 2014

Latest NEWS



1.  Opening of holiday home at Tirupati for CG employees

2.  Grant of increased rate of Washing Allowance to the Canteen Employees
3.  Restricted Holiday(R.H.) on the occasion of the Maha Shivratri  to be observed on 17th February, 2015


மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

தமிழ் மாநில பொறுப்பாளர்கள் அகில இந்திய பொறுப்பாளர்களுடன்
அன்பு தோழர்களே
        வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது
         மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது.
அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் 
          மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  
அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்கள்  தற்போதைய நிலையில் இலாகா சந்திக்கும் பிரச்சனைகள் 7 வது ஊதியகுழுவில் நமது கோரிக்கைகள் அதனை பற்றிய நிலை போன்றவற்றை விளக்கினார். அதனை தொடர்ந்து கர்நாடக மாநில செயலரும் நமது அகில இந்திய உதவி செயலருமான திரு B . ஷிவ்குமார் அவர்கள்.
முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. P.S. பாபு  அவர்கள் முன்னாள் ACP Tamilnadu Circle திரு.N.R. கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.

      இடைக்கால குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவில்பட்டி கோட்ட நிர்வாகிகளுடன் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.
From Left to Right, Shri.Thirugnana Sampantham, Shri.K.Mohan Rao, Shri.B.Shivkumar, Shri.P.S.Babu and Shri Kishan Rao

நெல்லை கோட்டம் மீண்டும் SPOs ஆகா தரம் மாற்றப்படுகிறது

          கடந்த சில தினங்களுக்கு முன்னாள்  SSPOs ஆக தரம் உயர்த்தபட்டது தற்போது மீண்டும் SPOs ஆகா தரம் மாற்றப்படுகிறது

Friday, 11 July 2014

எதிர்பார்ப்பு அதிகம் - ஆனால் ஏமாற்றம் இல்லை.

                      பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.  2014-15 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிறிய மற்றும் மிகச்சிறிய வரிவிதிப்பிற்கு உரியவர்களுக்கு குறிப்பாக மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சாதகமானதே.
சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
உற்பத்தி வரிவிதிப்பின் மூலம், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. வரிவிலக்கு மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சிஆர்டி தொலைக்காட்சிகள் விலை குறைகிறது. அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
  • வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது. 
  • மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறது. 
  • கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருந்தது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. 
  • இராக் உள்நாட்டு சர்ச்சையும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக பெய்துள்ளதும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். 
  • இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த மிக முக்கியமான, துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளப்படும் 
  • கவர்ச்சித் திட்டங்கள், அநாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும். அரசு செலவினங்களை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்
  • பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
  • நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% என்ற சவாலான இலக்கை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான  மானியம் மறு சீரமைக்கப்படும். 
  • வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
  • அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு
  • வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் 
  • உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம். 
  • வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.
  • 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 
  • 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் இதற்காக 'பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா' செயல்படுத்தப்படும்.
  • சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத் ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்
  • ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.
  • தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது. 
  • அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். 
  • முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.
  • அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு       49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும். 
  • வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்
  • பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்
  • பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது. 
  • ஆண் - பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். 
  • பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும். பெருநகரங்களில் பெண்கள் பாதுகாக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
  • ரூ.500 கோடி செலவில் மேலும் 5 IIT க்களும், 5 IIM களும் நிறுவப்படும். ஜம்மு, சத்தீஸ்கர், ஆந்திரம், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் IIT கள் அமைக்கப்படும். பஞ்சாப், இமாச்சல பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தானில் IIM கள் அமைக்கப்படும்.
  • தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 
  • ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்
  • விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும். 
  • கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
  • காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும். 
  • நிலமில்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம் நிதியுதவி வழங்க பரிந்துரை.
  • விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்
  • கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும் 
  • படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 AIMS மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 AIMS மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும் 
  • சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • வேளாண் துறையில், 4% வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் 
  • நடப்பு நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • விவசாயிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். 
  • விவசாய கடன்களை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்
  • புதிய யூரியா கொள்கை கொண்டு வரப்படும்
  • தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் 
  • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்
  • புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும். 
  • கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்
  • மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம் மறு சீரமைக்கப்படும்
  • ரூ.100 கோடி செலவில் போர் நினைவிடம் கட்டப்படும்
  • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
  • 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் 
  • காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • தற்போது நாடு முழுவதும் 15,000 கிமீ தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் இருக்கின்றன. பொதுத்துறை - தனியார் துறை பங்களிப்பில் இது இருமடங்காக அதிகரிக்கப்படும்
  • மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். 
  • தேசிய விளைடாட்டு அகாடமி அமைக்கப்படும் வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமாமி கங்கா ("Namami Ganga") என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது 
  • கங்கை நதியை சுத்தப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர் நிதி திட்டம்
  • இடம்பெயர்ந்த காஷ்மீரிக்கள் மறுவாழ்விற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  • இமாலய மலை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள உத்தராகண்டில் தேசிய அகாடமி நிறுவப்படும்
  • வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்த ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது
  • வடகிழக்கு மாநிலங்களுக்காக பிரத்யேகமாக 'அருண் பிரபா' என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்படும்
  • வருவாய் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 2.1% ஆக இருக்கும்
  • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு
  • வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு  
  • 80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • வரிவிதிப்பின் மூலம் ரூ.9.77 லட்சம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது
  • ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். 
  • மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும் 
  • நேரடி வரி, மறைமுக வரி வசூல் இலக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டதே பின்பற்றப்படும்
  • நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும்
  • கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி 3% ஆகவே நீடிக்கும் என அறிவிப்பு
  • புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது
  • தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி விதிப்பு. 
  • அச்சு விளம்பரங்களுக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது
  • பயோ - மெடிக்கல் கழிவு அகற்றும் பணிக்கு சேவை வரியில் விலக்கு. 

மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

அன்பு தோழர்களே
        வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது
         மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது.
அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் 
          மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  
அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்கள்  தற்போதைய நிலையில் இலாகா சந்திக்கும் பிரச்சனைகள் 7 வது ஊதியகுழுவில் நமது கோரிக்கைகள் அதனை பற்றிய நிலை போன்றவற்றை விளக்கினார். அதனை தொடர்ந்து கர்நாடக மாநில செயலரும் நமது அகில இந்திய உதவி செயலருமான திரு B . ஷிவ்குமார் அவர்கள்.
முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. P.S. பாபு  அவர்கள் முன்னாள் ACS Tamilnadu Circle திரு.N.R. கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

      இடைக்கால குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவில்பட்டி கோட்ட நிர்வாகிகளுடன் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

Wednesday, 9 July 2014

Rail Budget: Private sector, foreign investors get ticket to ride on Modi's bullet train

Railway minister Sadananda Gowda used his budget on Tuesday — the first major policy showcasing of the Modi government — to signal its intention of using private sector investments, both domestic and foreign, as the prime engine of growth and modernization. Having got rid of the difficult part by hiking rail fares and freight charges late last month, Gowda could focus his budget speech on the new government's vision for the Railways, and he did just that.

READ ALSO : Modi sheds populism baggage from rail budget

The government's vision clearly has a major role for the private sector in everything from new projects and freight terminals to cleanliness and food on trains and at stations. As Gowda's speech made clear, "It is our target that bulk of our future projects will be financed through PPP (public-private partnership) route".

He argued that while hikes in fares and freight charges were necessary to sustain financial viability, it would be "unrealistic" to depend solely on such an approach to raise the resources needed for modernizing the prime national transporter. That's why, the minister said, his ministry was seeking Cabinet approval for allowing FDI in the sector.

READ ALSO : Govt to allow FDI in suburban rail corridors, stations

Gowda was at pains to point out that successive governments in the past had announced new projects with abandon — falling prey to the "nasha (intoxication) of claps — but had been lax in implementing them to the extent that some were pending for three decades. In contrast, he said, the focus now would be on prioritizing projects. In particular, doubling and trebling of lines to decongest major routes would get the nod ahead of new lines, which have typically been unviable.
In keeping with this line of shunning populism and in a radical departure from historical practice, the minister did not announce any new projects in his budget, though there were a slew of new trains (including those announced by the UPA in the interim rail budget) and extensions of existing ones. Gowda also castigated earlier governments for failing to raise passenger fares and thus creating a situation in which the loss per passenger kilometre had risen from 10 paise in 2000-01 to 23 paise in 2012-13.

READ ALSO: Railway finances hang by 6-paise thread

Describing the noughties as the "decade of golden dilemma - the dilemma of choosing between commercial viability and social viability", Gowda said while the Railways would continue to fufil social obligations, doing so beyond a point was "not possible without compromising on efficiency and safety".

Despite the pro-corporate and pro-reform tone of the rail budget, stock markets reacted adversely with the sensex shedding 518 points, its biggest single-day decline in 10 months. The slump was attributed by market analysts partly to the absence of details in the budget speech. Also, while corporates and markets are looking forward to greater fiscal discipline, there's a worry that a stricter watch on government spending could lower demand and hence hit growth.

READ ALSO: Sensex tanks 518 points on spending cut fears

The political opposition as well as the railway unions, not surprisingly, reacted sharply to the budget, with some dubbing it 'elitist' and others decrying the move to 'privatize' the railways.

The new-look railways, Gowda promised, would include a bullet train between Mumbai and Ahmedabad, high-speed trains on nine sectors, a greater focus on cleanliness and decent food and further improvements in the e-ticketing system. They would also see some stations being developed along the lines of the new airports through the PPP route.

READ ALSO: High-speed trains, push for new routes cheer Mumbai

Corporates will not just have a role to play in developing new freight terminals, they could also adopt stations and take care of their cleanliness and maintenance. NGOs and charitable institutions too could do so. CCTVs will be used to monitor cleanliness at stations.

Food courts at major stations, where regional cuisines would be available, and pre-cooked meals on board from reputed brands are among the promises on the catering front.

READ ALSO: Taste of India put on the fast track

Not only will tickets be available for booking online, the facility would also be extended to booking trains, coaches, or seats. Online booking of retiring rooms will be extended to all stations in 2014-15, the minister promised.

Business travellers will also, on some select trains, be able to use workstations for a fee. For the handicapped and elderly, the service of battery-operated carts will be extended to cover all major stations. Safety of women too found a mention, with the rail mantri saying 4,000 women RPF constables would be recruited towards this end. Also, "coaches for ladies will be escorted" and additional care would be taken of women travelling alone.


Tuesday, 8 July 2014

Federation NEWS

1) Amendment to Factories Act, 1948.

2) Inter-ministerial consultations with Ministries to resolve the issue related to DoPT 


3) Centre made a discretionary decision on 7th CPC Terms of Reference – National Council JCM

4) No Third MACP after 20 years from 1st Promotion – DOPT 
Click here to see the details

Friday, 4 July 2014

ஆனிமாத திருத்தேரோட்டம் மற்றும் தேர்தல் சிறப்பு மாநாட்டு அழைப்பு.

 
தேசிய நெஞ்சங்களே 
சில மாதங்களாக நமது மாநில சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்க நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், தினம் தினம் ஏற்படுத்தப்படும் புது புது தடைகளை தூள் தூளாகவும்  

பாடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என நாமும் ஆனந்த கூத்தாடிட ………………………..   
நம் கனவு மெய்ப்பட எம் பாரதி உலாவிய கோவில்பட்டி நோக்கி 
அழைக்கிறோம் வாரீர் வாரீர்

மாநில தேர்தல் சிறப்பு மாநாட்டிற்கு வரும் தேசிய நெஞ்சங்களே  
நெல்லையில் அசைந்தாடும் ஆனி திருத்தேர் அழகை கண்டுகளிக்க ஆசையா உங்களுக்கு? 

10.07.2014 அன்று ஸ்ரீ நெல்லையப்பர்-காந்திமதியம்மாள் ஆனிமாத திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு வரும் அன்பர்கள் காலையில் நேராக நெல்லை நோக்கி வருக. சரியாக காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அதை கண்டு கழித்து விட்டு 1 மணி நேர பயண தூரத்தில் கோவில்பட்டியை அடையலாம். தேர்தல் சிறப்பு மாநாட்டில் பங்குபெற்று ஜனநாயக கடைமையை ஆற்றலாம் வாரீர் வாரீர்.
மேலதிக விவரங்களுக்கு எமது கோட்ட நண்பர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி நன்றி

Protest against arbitrary grant of TU facilities to BPEF



Protest against arbitrary grant of Trade Union facilities to Bharathiya Postal Employees Federation (BPEF) and all its affiliated unions 

No merger of DA - Finance Ministry

Finance Ministry once again ruled out any possibility of merger of D.A. with basic pay for central employees. In a letter addressed to National Council Secretary Shri Shiva Gopal Mishra on 17.6.2014, regarding the main demand of merger of dearness allowance with basic pay, Govt sticked on the resolution taken on 29.08.2008 in respect of definite proposal of sixth pay commission (No merger of D.A.). 

This has been a long standing demand for central employees and it will certainly dishearten them.
View the letter from Dept. of expenditure (Finmin)


மாநில தேர்தல் சிறப்பு மாநாடு.

இடம்           :  L.G.செல்வமஹால் - கோவில்பட்டி
நாள்             :  10.07.2014   வியாழன்         நேரம் :  காலை 0900 மணி
தலைமை  : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் 
                        Convenor, Adhoc-Committee NAPE Gr C, Tamilnadu Circle
பொருள்      : மாநில நிர்வாகிகள் தேர்வு
சிறப்புரை   : திரு.D.தியாகராஜன் அவர்கள்
                       மஹா பொதுச்செயலாளர், தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்
                       திரு.D.கிஷன் ராவ் அவர்கள் 
                       அகில இந்திய பொதுச்செயலாளர் P3 புது டெல்லி
                       திரு. P.S. பாபு  அவர்கள்
                       முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் P3

அனைவரும் வருகை தந்து மாநாட்டை சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்
============================
P.திருஞான சம்பந்தம்
Convenor, Adhoc-Committee NAPE Gr C, Tamilnadu Circle
வரவேற்பு குழு தலைவர்
வரவேற்பு குழு உறுப்பினர்கள்
மோகன்ராவ், கோட்டசெயலாளர் கிருஷ்ணகிரி
ஸ்ரீநிவாசன்,திருச்சி 
J. குணசேகரன்,திருநெல்வேலி

தகவல் : மாநில சங்க வலையதளம்  www.fnpotamilnadu.blogspot.in

Thursday, 3 July 2014

Message of Secretary (Posts) for the staff and officers of the Department over the IT Project.

Dear colleagues,

     It gives me immense pleasure to update you about the ambitious IT Modernization project of the Department of Posts. As you know, with this project we have embarked upon a transformational journey. I take this opportunity to congratulate and thank each one of you for your dedication and hard work to bring about this historic transformation.

     At this point in time, we have already networked close to 23,000 locations, making our the largest WAN in the country. Implementation of our Core Banking System and PLI solutions have attained a critical mass, which will enable us to undertake performance testing & certification before further roll outs. Core SI solutions relating to Mail Operations, Human Resources and F&A are in the UAT stage; and we are nearing identification of a vendor for the Rural Hardware program to support the modernization of our rural post offices.

       Implementation of the CBS and Core-PLI solutions has been gradual by design so that we can pinpoint errors/ defects in the solutions and address them appropriately, before graduating to an exponential roll-out phase. As expected, officers and staff are facing some challenges during the initial implementation phase. While we continue to strengthen the solutions based on these valuable experiences, the extra mile that you all have traversed in order to manage these challenges is commendable. 

        As the implementation gathers steam, I would request each one of you to keep up the energy & commitment you have demonstrated so far. We will make sure that the required technical and administrative support for success is made available.

       The primary objective of the IT modernization project has been to enhance customer, satisfaction through better service delivery. The project will enhance the Post Offices capabilities, and enable it to deliver more efficient services, and more add-on services & products. Hon’ble Prime Minister of India has also urged the Department to fast-track the IT-modernization project and improve the quality of service. Thus, being sensitive and responsive to the customer is the need of the hour. 

      You will agree that it is a matter of great pride for each one of us to be associated with this huge transformational project. We must now work hand in hand to make this historical transformation happen quickly.

Together we can, and we will do it!!

Kavery Banerjee
Secretary (Posts)

Wednesday, 2 July 2014

Federation NEWS

அஞ்சல் துறையில் லஞ்சம் - இந்து நாளிதழில் செய்தி காற்றில் பறக்கும் மானம்

அஞ்சல் துறை ஊழியர்கள் பரஸ்பர இடமாறுதல் (Mutual Transfer) வேண்டி வேறு ஊரில் பணிபுரியும் ஊழியர்களை அணுகும்போது, அவர்களிடம் சம்பந்தப்பட்ட சில ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் பழைமையான துறைகளில் அஞ்சல் துறையும் ஒன்று. இந்தியா முழுவதும் சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் துறைசார் ஊழியர்களும், EDS எனப்படும் கூடுதல் துறை ஊழியர் களும் அடக்கம். தமிழகத்தில் மட்டுமே அஞ்சல் துறையில் 30,000-த்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
வேறு ஊரில் வேலை
இதில் வட்டம், மண்டலம், பிரிவு, இணை என பல்வேறு வகையான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அஞ்சல் உதவியாளர்கள், கணக்கர்கள், பல்பணி ஊழியர்கள் (multi tasking staff) என்று பல மட்டங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அஞ்சல் துறையால் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் மேற்கண்ட பொறுப்புக்கு வரும் இவர்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே நினைத்த இடத்தில் வேலை கிடைப்பதில்லை. இப்படி தேர்வாகும் ஊழியர்கள் வேலை கிடைக்கின்ற ஊரில் உள்ள அலுவலகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பணிபுரிந்துவிட்டு, அதன்பின்னர்தான் இடமாறுதலுக் காக விண்ணப்பிக்க முடியும்.
பரஸ்பர இடமாறுதல்
இது தவிர பரஸ்பர இடமாறுதல் என்னும் வசதியும் அஞ்சல் துறையில் உள்ளது. அதாவது திருநெல்வேலியில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு சென்னைக்கு இடமாறுதல் வேண்டுமென்றால், அவரைப்போலவே சென்னையில் பணிபுரிந்து கொண்டு திருநெல் வேலிக்கு இடமாறுதல் வேண்டி காத்திருக்கும் ஒருவரை அணுகி இருவரும் பரஸ்பர இடமாறுதல் கோரலாம். அப்படி அவர் ஒப்பு கொள்கிற பட்சத்தில் பரஸ்பர இட மாறுதல் முறைப்படி இருவரும் தங்களது வேலையிடங்களை மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால் இந்த முறையிலும் இப் போது சில முறைகேடுகள் நடப்ப தாகக் கூறப்படுகிறது. சிலர் அவ சரத்துக்காக பரஸ்பர இடமாறுதல் வேண்டி சில ஊழியர்களை அணுகுகிறபோது இடமாறுதல் கோரி வருபவர்களிடம் கணிச மானத் தொகையை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் அஞ்சல் பிரிவின்கீழ் வரும் ஒரு இணை அலுவலகத்தில் பணி புரியும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் கோவை பக்கம். தேர்வின் மூலம் அஞ்சல் துறை உதவியாளர் பணிக்கு சேர்ந் தேன். சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. எனது கணவர் சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பரஸ்பர மாறுதல் கிடைத்தால் சென்னைக்கு செல்லலாம் என் நினைத்தேன்.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் சென்னை பிரிவில் பணியாற்றுவது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை அணுகிய போது, பரஸ்பர இடமாறுதல் செய்ய வேண்டுமென்றால் ரூ. 1 லட்சம் தரவேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதிக்காமல் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன் என்றார்.
ஏற்கமுடியாது
இது தொடர்பாக அனைத்திந்திய தபால்துறை ஊழியர்கள் கூட்ட மைப்பின் தமிழக மாநில செய லாளர் ஜெ.ராமமூர்த்தியிடம் கேட்ட போது, “சென்னையில் வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு மற்ற ஊர்களில் வேலை செய்பவர் களைக் காட்டிலும் சலுகைகள் அதிகம். எனவே அதை ஈடு செய்யும் விதமாக சிலர் இப்படி செய் யலாம். ஆனால் இதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்றார்.
நடவடிக்கை உறுதி
இந்தப் பிரச்சினை குறித்து சென்னை வட்ட பொது அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் கூறுகையில், “அஞ்சல் துறையை பொறுத்த வரை பரஸ்பர இடமாறுதல் நினைத்த போதெல்லாம் கிடைக் காது. பரஸ்பர மாறுதலுக்காக விண்ணப்பதாரர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். மேலும் பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படா மல் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படுவதுடன் லஞ்சம் கேட் கும் ஊழியர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படாமல் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Monday, 30 June 2014

மே மாதம் வரை 6 சதவிகிதம் DA உயர்வு

AICPIN for the month of May2014
Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW)- May2014
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for May, 2014 increased by 2 points and pegged at 244 (two hundred and forty four only)
மே மாதம் வரை 6 சதவிகிதம் DA உயர்ந்து 106 சதவிகிதத்தை தொட்டது. ஜூன் மாதம் வரையிலான உயர்வை அறிய ஜூலை 31 ம் தேதி வரை காத்திருக்கவும்.
 

மணநாள் வாழ்த்து

30.06.2014 அன்று மணநாள் காணும் நமது சேலம் மேற்கு கோட்ட செயலாளர் திரு.M.துரைசாமி - திருமதி C.தமிழ்செல்வி அவர்களின் புதல்வி
மணமகள் செல்வி D.நிரஞ்சனா,B.E.,             Weds
மணமகன் செல்வன் K.ராம்குமார், B.E.,
இணை வாழ்வில் வளம் பதினாறும் பெற்று  பல்லாண்டுகள்  வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
இடம் :T.A.ராமசாமி முதலியார் அம்மணியம்மாள் திருமண மண்டபம்   
            திருச்செங்கோடு 
நாள்   : 30.06.2014  திங்கள் கிழமை
நேரம் : காலை 06 மணிக்கு மேல் 07 மணிக்குள்
29.06.2014  அன்று நடைபெற்ற மிக பிரமாண்ட திருமண வரவேற்பு விருந்தில் நமது தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்,
திருநெல்வேலி கோட்ட செயலாளர் திருS.A. இராம சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணநாள் வாழ்த்து.

30.06.2014 அன்று மணநாள் காணும் நமது தேசிய சங்க துணை தலைவர்
திருP.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வி
மணமகள் செல்வி S. சிவபிரியா B.E., Weds
மணமகன் செல்வன் P.சண்முகராஜா B.A., B.L., அவர்கள்
இருவரும் வாழ்வில் வளம் பதினாறும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

நாள் :  30.06.2014                         இடம் : KTC நகர் மகராசி மஹால்
நேரம் : காலை 1000 மணி முதல்

"வாழ்க வள்ளுவம் காட்டிய வழி" என வாழ்த்துவோம் வாரீர் தோழர்களே !

Sunday, 29 June 2014

Happiness let's begin.........

புனித குரானை இவ்வுலகிற்கு தந்த புனித ரமலான் மாதத்தின் தொடக்கம் இன்று.  இந்நாள் அனைவருக்கும் அன்பையும் சமாதானத்தையும் கொண்ட வளமான வாழ்வின் தொடக்கமாகட்டும்.
        இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான உண்ணா நோன்பை இன்றுமுதல் நோர்க்கபோகும் இனிய இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Friday, 27 June 2014

7TH CPC Proposed pay structure under discussion.

           Proposed Pay Scales for Central Government Employees on implementation of 7th Pay Commission – National Council JCM  National Council JCM has released Proposed Pay Scales for Central Government Employees on implementation of 7th Pay Commission  National Council Joint Consultative Machinery Staff Side PROPOSED PAY STRUCTURE UNDER DISCUSSION

Click here to see the detail

Flash NEWS

1)The world’s largest postal network wants to become a bank—and it should

2) income Tax 2014-15 (Assessment Year 2015-16) – Salaried Women to get higher Income Tax Exemption Limit – media reports
3) Retirement issue is to be handled with social mindset – says Dr. Jitendra Singh  

CLICK THE ABOVE LINK TO SEE DETAIL

5)Draft of JCM Memorandum to 7th CPC and Proposed Pay Scale
Click the above link to see detail

6) Classification of Posts in 7th Pay Commission – NC JCM Staff Side Suggestion.
7) NC JCM STAFF SIDE SUGGESTION ON HOUSE RENT ALLOWANCE
8)Demand to calculate House Rent Allowance based on Census 2011 should gain prominence
9)NC JCM Staff Side suggestion on Children Education Allowance 
10) NC JCM Staff Side demanding five promotions in the service career
11) Should the GRADE PAY STRUCTURE continue in the 7th CPC too?
12) Suggestion on Transport Allowance by NC JCM Staff Side
13) Foreign Tour for CG Employees – Demanded by NC JCM Staff Side
Click here to see the above in detail 

Wednesday, 25 June 2014

Latest News

LTC by air extended for 2 more years to Jammu and Kashmir and North East
Government employees who have differently abled children will be exempted from transfer – Dopt Orders
General Budget 2014-15: NFIR Presents list of proposals to be considered
Dopt guidelines reg of complaints in Ministries\Departments

Good Bye and Welcome.

               நமது கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளர் ஆக தரம் உயர்த்தபடுவதால் நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு லக்ஷ்மண பிள்ளை அவர்கள் இடமாறுதல் பெற்று தூத்துக்குடி கோட்டத்திற்கு இன்று மாறுதல் ஆகிறார். கடந்த காலங்களில் அவர்தம் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துகிறோம். 
            நமது கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு ஏற்கும் கன்னியாகுமரி கோட்ட SSPOS திரு .செல்வராஜ் அவர்களை வரவேற்கிறோம்   

Mutual Transfer.

Dear Friends,
               One official working as PA in Tuticorin Division is seeking Mutual Transfer to Virudhunagar Division. If anybody is willing to Transfer under Mutual basis from Virudhunagar to Tuticorin Division/Tirunelveli Division, may please be contact Shri.N.J.Uthayakumaran, Divisional Secretary FNPO P3, Tuticorin Division. Ph : 94425 81144

                 One official working as PA in Vridhachalam Division is seeking Mutual Transfer to any Division in Southern Region. If anybody is willing to Transfer under Mutual basis from Souther Region to Vridhachalam Division, may please be contact Shri.N.Bala Krishnan, Divisional Secretary FNPO P3, Vridhachalam Division. Ph : 94432 91772.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms